
காதலர் தினத்திற்காக இந்தியாவிலிருந்து சிவப்பு ரோஜாக்கள் இறக்குமதி
காதலர் தினத்திற்காக இந்தியாவில் இருந்து சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தேவைக்கு ஏற்ப ரோஜாக்களை வழங்க முடியாததால் ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
நாட்டில் உள்ள பெரும்பாலான ரோஜாக்கள் தோற்றத்தில் சிறியதாகவும், இறக்குமதி செய்யப்படும் சிவப்பு ரோஜாவின் தோற்றம் அதிகமாகவும் இருப்பதால், அதற்கு அதிக தேவை இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.