உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் கூட்டணி; தேர்தல் ஆணைக்குழுவிடம் விசேட கோரிக்கை – தயாசிறி

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான தினத்தை அறிவிக்க முன்னர் வரவு – செலவு திட்டம் விவாதம், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் மற்றும் தமிழ் – சிங்கள புத்தாண்டு உள்ளிட்ட காரணிகளை கவனத்தில் கொண்டு தீர்மானமொன்றை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் கூட்டணி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தயாசிறி ஜயசேகர, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் உள்ளிட்டோர் வியாழக்கிழமை (13) தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர் நாயகம் உள்ளிட்டோரை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட 13 கட்சிகளின் கையெழுத்துடன் தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் எதிர்வரும் 17ஆம் திகதியிலிருந்து மார்ச் 26ஆம் திகதி வரை வரவு – செலவு திட்டம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தில் 12 எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 66 உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளோம். அரசாங்கத்துக்கு 159 உறுப்பினர்கள் உள்ளனர்.

வரவு – செலவு திட்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சி என்ற ரீதியில் எமக்கே அதிக பங்கு காணப்படுகிறது. அதற்கமைய 66 உறுப்பினர்களும் குறித்த காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே இதற்கிடையில் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டால் எதிர்க்கட்சிகளுக்கு கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். என வே வரவு – செலவு திட்டம் விவாதம் நிறைவடைந்ததன் பின்னர் தேர்தலுக்கான தினத்தை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளோம்.

இதற்கு முன்னர் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சுமார் 80 000 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதற்கமைய பாரிய தொகையை கட்டுப்பணமாக செலுத்தியிருக்கின்றோம். கட்சி என்ற ரீதியில் சராசரியாக ஒவ்வொரு கட்சிகளாலும் தலா ஒன்றரை கோடி வரை கட்டுப்பணத்துக்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகையை மீளப் பெற்றுக் கொண்ட பின்னரே எம்மால் இம்முறை கட்டுப்பணத்தை செலுத்த முடியும். ஜே.வி.பி.யின் கணக்கிற்கு மாதமொன்று 5 கோடி பொரளை மக்கள் வங்கியில் வைப்பிடலிடப்படுகிறது. அதற்கமைய அவர்களுக்கு வருடத்துக்கு 60 கோடி வருமானம் கிடைக்கின்றது. எமது கட்சிகளுக்கு அவ்வாறானதொரு நிதியம் கிடையாது.

இவை மாத்திரமின்றி தமிழ் – சிங்கள புத்தாண்டு தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு அரச உத்தியோகத்தர்கள் அதற்காக பணியாற்ற வேண்டியேற்படும். எனவே புத்தாண்டு விடுமுறை உள்ளிட்டவை தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். விசேடமாக மார்ச்சில் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் தேர்தல் காலம் தாழ்த்தப்படுகின்றமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையிலேயே நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.

எனினும் 17ஆம் திகதி திருத்தப்பட்ட சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டால் புதிய நிலைவரமே காணப்படும். அந்த வகையில் 3 மாத காலத்துக்குள் தேர்தல் குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கான சகல அதிகாரங்களும் தேர்தல் ஆணைக்குழுவுக்கே காணப்படுகிறது. எனவே தான் எம்மால் மேற்கூறப்பட்ட சகல காரணிகளையும் கவனத்தில் கொண்டு தேர்தலுக்கான தினத்தை அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். சகல கட்சி செயலாளர்களையும் அழைத்து அவர்களுடனும் கலந்துரையாடி தீர்மானத்தை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)