
என் வாழ்க்கையில் யாருடனும் வம்பு சண்டைக்கு போனதில்லை
அணமையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக பாரளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரச்சுனா தனது சமூக ஊடகங்களில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ”என் வாழ்க்கையில் யாருடனும் வம்பு சண்டைக்கு போனதில்லை. துஷ்டனை கண்டால் தூர விலகு என்று என் தந்தை தெளிவாக சொல்லி தந்திருக்கிறார். கடந்த சம்பவம் ஒரு துன்பியல் சம்பவம்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினராக என்பதை விட ஒரு வைத்தியராக மனதுக்குள் ஒரு ஆழமான கவலையை உண்டாக்கி இருக்கிறது.
காயங்களுக்கு மருந்திடும் கைகளால் காயத்தினை ஏற்படுத்தி இருக்கின்றேன்.
ஒரு பெண்ணை இழிவு படுத்தி காவாலித்தனம் செய்யும் போது பொறுமையும் ஒரு தடவை செத்து போய்விடுகிறது.
ஆழமான வலிகளுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.