அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதன் தலைவர் சரித் அசலங்க தனது நான்காவது ஒருநாள் சதத்தை இந்தப் போட்டியில் பதிவுசெய்தார்.

இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் பிரகாசிக்க தவறிய நிலையில், சரித் அசலங்க 05 ஆறு ஓட்டங்கள், 14 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 127 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

தொடர்ந்து , 215 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 33.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் அலெக்ஸ் கேரி (Alex Carey) அதிகபட்சமாக 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியின் ஊடாக இரண்டு போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )