
டொன் பிரியசாத்துக்கு விளக்கமறியல்
கைதுசெய்யப்பட்ட சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தை பெப்ரவரி 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த அவர் நேற்று (11) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
அரகலய போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka