![மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் மதிப்பீடுகள் முன்னெடுக்கப்படும் – அமைச்சரவை பேச்சாளர் மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் மதிப்பீடுகள் முன்னெடுக்கப்படும் – அமைச்சரவை பேச்சாளர்](https://peoplenews.news/wp-content/uploads/2025/02/24-673c7e9fa4bca.jpeg)
மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் மதிப்பீடுகள் முன்னெடுக்கப்படும் – அமைச்சரவை பேச்சாளர்
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் மதிப்பீடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மின்சக்தி அமைச்சும், இலங்கை மின்சாரசபையும், மின்சாரசபையின் பொறியியலாளர் சங்கமும் மின் வெட்டு தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளன. மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது அவற்றுக்கு நிரந்த தீர்வினை வழங்குவதற்கு உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. குறுகிய கால நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மின் தடையால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில் இதுவரையில் மின்சாரசபை எவ்வித அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை.
நஷ்டம் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்