
பாடசாலை ஒன்றில் மோதல் – மாணவிகள் உட்பட 11 பேர் காயம்
போமிரிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (11) பிற்பகல் நடைபெற்ற கேடட் பயிற்சி அமர்வின் போது இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவிகள் உட்பட 11 பேர் காயமடைந்து நவகமுவ பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் மாணவருடன் பாடசாலைக்குள் நுழைந்த வெளியாட்கள் குழு, மாணவர்களுடன் மோதலை ஏற்படுத்தியதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து நவகமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.