உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸில் தங்கம் வென்ற சமித்த துலான்

உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸில் தங்கம் வென்ற சமித்த துலான்

இலங்கை இராணுவ தடகள வீரரான அதிகாரவாணையற்ற அதிகாரி II கே.ஏ. சமித்த துலான் அவர்கள் உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்று வரலாறு படைத்துள்ளார்.

துபாயில் உலகின் தலைசிறந்த பரா-தடகள வீரர்களுடன் போட்டியிட்டு, துலான் 61.88 மீற்றர் தூரம் எறிந்து முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் என்பது உலகளாவிய ரீதியில் நடைபெறும் மதிப்புமிக்க நிகழ்வாகும். இது உயர் மட்டத்தில் போட்டியிடும் பரா-தடகள வீரர்களை ஒன்றிணைக்கிறது. துலானின் வெற்றி சர்வதேச பரா-விளையாட்டுகளில் இலங்கையின் எழுச்சியை காட்டி நிற்கின்றது.

அவரது தங்கப் பதக்க வெற்றி, உலகளாவிய பரா-தடகள சமூகத்தில் இலங்கையின் நிலையை உயர்த்தும் என்றும், இளம் விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பொருட்படுத்தாமல் சிறந்து விளங்க ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )