
கொகைன் கொடிய போதைப்பொருள் அல்ல
உலகின் மிக கொடிய போதைப்பொருட்களில் ஒன்றாக கொகைன் உள்ளது. மெக்சிகோ, தென் அமெரிக்கா நாடுகளில் இருந்து கொகைன் கடத்தப்பட்டு உலகம் முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.
போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போராடி வருகிறது. இந்தநிலையில் தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. இதில் அந்த நாட்டின் ஜனாதிபதி கஸ்டவோ பெட்ரோ கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், கொகைன் மிக கொடிய போதைப்பொருள் அல்ல என்று கூறினார். அவர் கூறுகையில், ‘மதுபானங்களை ஒப்பிடும்போது கொகைன் ஒன்றும் மிக கொடிய போதைப்பொருள் அல்ல என்பது அறிவியல் உண்மை. கொகைனுக்கு உலகளவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்தால் அதன் பயன்பாடு எளிதாக குறையும்” என்றார்.
CATEGORIES World News