ஹிருணிகாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு உத்தரவு

ஹிருணிகாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு உத்தரவு

வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (10) உத்தரவிட்டுள்ளார்.

வீதி நாடகம் நடத்தியதாகவும், பொதுமக்களை துன்புறுத்தியதாகவும், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி கறுவாத்தோட்ட பொலிஸாரால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் (2022) தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் இன்று காலை இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சந்தேகநபர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜராகியதையடுத்து, பிடியாணைகளை மீளப்பெறுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )