
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
கிரிபாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மரதன்கல்ல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபாவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (09) பிற்பகலில் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதுடைய கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka