
மின் பிறப்பாக்கியிலிருந்து வெளியான புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!
மின் பிறப்பாக்கியில் இருந்து வெளியான புகையினால் பாதிப்புக்குள்ளான நால்வர் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
நாடளாவிய ரீதியில் இன்று ஏற்பட்ட மின்சார விநியோகத்தடையை அடுத்து, பொகவந்தலாவை நகரில் உள்ள விற்பனை நிலையமொன்றில் மின்சாரத்தை பெறுவதற்காக மின் பிறப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மின் பிறப்பாக்கியில் இருந்து வெளியான புகையினை சுவாசித்ததன் காரணமாக அந்த விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் நால்வர் சுகவீனமுற்றுள்ளனர்.
இதனை அடுத்து குறித்த நால்வரும் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.