
சிலியில் வேகமாகப் பரவும் காட்டுத்தீ – அவசரநிலை பிரகடனம்!
தென் அமெரிக்க நாடான சிலியின் நூபிள் (Nuble), மவுலின் (Maullín) ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாகக் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இரு மாகாணங்களிலும் 15 இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது.
இந்நிலையில், காட்டுத்தீ காரணமாக நூபிள் (Nuble), மவுலின் (Maullín) ஆகிய 2 மாகாணங்களிலும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, காட்டுத்தீயைப் பற்ற வைத்ததாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.