
மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் பலி
அநுராதபுரம், இப்பலோகம, ரணஜயபுர பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அநுராதபுரம், இப்பலோகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார்.
இவர் கணேமுல்ல இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka