
ரஷ்யா இராணுவத்தில் இணைந்து கொண்ட 59 இலங்கையர்கள் பலி
ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் இன்று (07) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர், ”ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளனர், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை.
இந்த நாட்டிலுள்ள அவர்களில் உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.