
சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிரி வோல்ட், சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து அரசாங்கம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும் ஆதரவுகளுக்கு சபாநாயகர் இதன்போது நன்றி தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி, ஊழல் ஒழிப்பு முயற்சிகள், நல்லிணக்கம் மற்றும் பாராளுமன்ற ஒத்துழைப்புக்களை அதிகரித்தல் உள்ளிட்ட பிரதான துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சுவிட்சர்லாந்துத் தூதுவர், எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான சுவிட்சர்லாந்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

