
முஸ்லிம் பாடசாலையில் தீ விபத்து : 17 மாணவர்கள் பலி !
வட நைஜீரியாவில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்து காரணமாக பல மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
விடுதியில் சுமார் 100 மாணவர்கள் தங்கியிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீ விபத்தில் 10 முதல் 16 வயதுடைய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன