பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் – நேரலை

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய நாளில் மு.ப. 10.00 – மு.ப. 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதோடு, மு.ப. 11.00 – மு.ப. 11.30 வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களும் மு.ப. 11.30 – பி.ப. 5.00 வரை தனியார் உறுப்பினர் பிரேரணை பிரேரிக்கப்படவுள்ளன.

  1. தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்திற்குச் சுவீகரித்தல் (ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி)
  2. கூட்டுறவுச் சங்கங்களுக்கு பொருட்களைக் கொள்வனவு செய்யும் செயல்முறைக்கு முறையான பெறுகை வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் (கிங்ஸ் நெல்சன்)
  3. அரசாங்கம் வசம் அரிசி கையிருப்பினை பேணிச் செல்வதற்காக வேலைத் திட்டமொன்றைத் தயாரித்தல் (ரோஹண பண்டார)
  4. தொழிலாளர் நலன்புரி அலுவலர்களை நியமனஞ் செய்வதற்கு பொருத்தமான முறையியலொன்றைத் தயாரித்தல் (சமிந்த விஜேசிறி)
  5. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்குதல் (ரவி கருணாநாயக்க)
  6. கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதைத் தவிர்த்து தகனம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல் ( சட்டத்தரணி ரஊப் ஹகீம்)

பி.ப. 5.00 – பி.ப. 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)