
வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக் கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் பெற்றோல் பௌவுசர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு முன் நேற்று (05) இரவு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் தேவாபுரம் பகுதியில் வேலை முடிந்து துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர் சித்தாண்டியை சேர்ந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்தை ஏற்படுத்திய பவுசர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka