மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி

மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 14ம் திகதி தொடங்கிய கும்பமேளா வரும் 26ம் திகதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.

இந்நிலையில் பிரதமர் மோடி பிரயாக்ராஜ் நகருக்கு இன்று வருகை தந்தார். காலை 11 மணியளவில் திரிவேணி சங்கமத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கு புனித நீராடினார். இதனை முன்னிட்டு அப்பகுதியில் பொலிஸார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)