
போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் நாட்டிற்கு வந்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் போதைப்பொருளை தான் கொண்டு வந்த பொருட்களுடன் சாக்லெட் பொதிகள் போல பொதி செய்து மறைந்து கடத்த முயன்றுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த 45 வயதான வியாபாரி என்பது தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து 1 கிலோ 40 கிராம் குஷ் ரக போதைப்பொருளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
CATEGORIES Sri Lanka