
உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
இலங்கையிலும் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் உச்சத்தை அடைந்துள்ளது.
அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 227,000 ரூபாவாக உள்ளது.
22 கரட் தங்கம் ஒரு பவுணானது 209,500 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (03) 24 கரட் தங்கத்தின் விலையானது 225,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலையானது 205,800 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.