
சுற்றுலாத்துறையுடன் இணைந்து இலங்கை தபால் துறையை வலுவூட்டும் திட்டங்கள்
இலங்கையின் முதல் ஐந்து தபால் நிலையங்களில் ஒன்றான காலி கோட்டை தபால் நிலைய வளாகத்தை புதுப்பித்து, அதை பயனுள்ள ரீதியாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் அங்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இது டச்சு காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் அமைந்துள்ளதுடன், நீண்ட காலமாக சரியான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாததால், தற்போது முழுமையாக பழுதடைந்த நிலையில் உள்ளது
இது குறித்து மிக விரிவாக ஆராய்ந்த அமைச்சர், இந்த வளாகத்தை பயனுள்ள ரீதியாகப் பயன்படுத்தினால், அது இலங்கை தபால் துறைக்கு விசேட மதிப்புடையதாக மட்டுமல்லாமல், அதிகளவு வருமானம் ஈட்டக்கூடியதாகவும் மாற்ற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.