வீழ்ச்சியைச் சந்தித்த கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (03) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (03) 166.24 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 16,956.49 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றைய தினம் 3 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.