சப்ரகமுவ மகா சமன் ஆலயத்தின் பொறுப்பாளர் தொடர்பான உத்தரவு
சப்ரகமுவ மகா சமன் ஆலயத்தின் தற்காலிகப் பொறுப்பாளராக எஸ். வி.சந்திரசிங்கவை நியமிப்பதற்கு பௌத்த விவகார ஆணையாளர் எடுத்த முடிவை செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) பிறப்பித்ததுள்ளது.
அத்துடன் 11 ஆம் திகதி நடைபெற உள்ள அந்த ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமேவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் அவர் வாக்களிப்பதைத் தடுக்கும் மற்றொரு இடைக்காலத் தடை உத்தரவையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
சப்ரகமுவ மகா சமன் ஆலயத்தின் முன்னாள் பஸ்நாயக்க நிலமே மிகார ஜயசுந்தர, பஸ்நாயக்க நிலமே சங்கத்தின் தலைவர் ஹேமந்த பண்டார ஹேரத் மற்றும் செயலாளர் பிரியந்த பண்டார ஜயசுந்தர ஆகியோர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.