மஹிந்த ராஜபக்சவை வெளியேற்றுவது தான் தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டமாக உள்ளது
மஹிந்த ராஜபக்ச விவகாரத்தில் புலிகள் மற்றும் டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலையே அரசாங்கம் செயல்படுத்திவருகின்றது எனவும், புலிகளின் சூழ்ச்சிக்குள் மக்கள் சிக்கக்கூடாது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “மஹிந்த ராஜபக்சவை வெளியேற்றுவதுதான் தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டமாக உள்ளது. மஹிந்த ராஜபக்ச என்பவர் சிங்கம்போன்ற தலைவர். அவர் ஒருபோதும் திணறமாட்டார். முடிந்தால் அரசாங்க விதிவிடத்திலிருந்து வெளியேறுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு அரசாங்கம் எழுத்துமூலம் அறிவிக்கட்டும்.
அவ்வாறு அறிவித்தல் விடுக்கப்பட்டால் ஒருநாள்கூட அங்கு இருக்கமாட்டார். நிச்சயம் வெளியேறுவார். புலிகள் மற்றும் டயஸ்போராக்களின் சூழ்ச்சியை செயல்படுத்தவே ஆட்சியாளர்கள் முற்படுகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.