கொள்ளுப்பிட்டி விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு!
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஆர்.ஏ.டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 24 வயதுடைய இங்கிலாந்து பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடுதியில் அவருடன் தங்கியிருந்த மற்றொரு தம்பதியினர் தற்பொழுது சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.