எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மிகவும் தீர்க்கரமானது
உள்ளூராட்சி மன்ற சேவைகள் இன்றும் கூட நடந்த பாடில்லை. எனவே நடக்கப்போகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. கிராமத்தை பாதுகாக்கவும் நகரத்தை பாதுகாக்கவும் மக்கள் நம்பிக்கை வைக்கும் திறமையான வேட்பாளர்களை நாம் களமிறக்குவோம். மக்கள் ஆதரவோடு நாம் வெற்றி பெற வழிவகுப்போம். இதனூடாக பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை பெற்றுக்கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
குருநாகல், ஹிரியால தேர்தல் தொகுதியில் கும்புக்கடே பிரதேசத்தில் அமைந்துள்ள கசாகல புராண ரஜமஹா விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் நேற்றைய (01) தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.