கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்ட ASLAT
பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
இலங்கை கடற்படையால் கடற்படை மரபுகளுக்கு இணங்க இந்த கப்பல் வரவேற்கப்பட்டது. PNS ASLAT கப்பல், முகமது அசார் அக்ரம் தலைமையிலான 123 மீட்டர் நீளமுள்ள ஒரு போர்க்கப்பலாகும்.
பயணப் பயிற்சி இந்தக் கப்பலில் 243 பேர் கொண்ட குழுவினர் பணியாற்றுகின்றனர். கொழும்பில் கப்பல் தங்கியிருக்கும் போது, அதன் பணியாளர்கள் நாட்டின் சில சுற்றுலா தலங்களைப் பார்வையிடுவார்கள் என்று இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பிஎன்எஸ் ASLAT 2025 பெப்ரவரி 4 ஆம் திகதியன்று இலங்கையை விட்டு புறப்படும் இதன்போது, கொழும்பு கடலில் இலங்கை கடற்படையின் ஒரு கப்பலுடன் ஒரு பயணப் பயிற்சியை பாகிஸ்தானிய கப்பல் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.