பாடசாலைகளிலும் Clean Sri Lanka வேலைத்திட்டம்
Clean Sri Lanka திட்டத்தின் விரும்பிய நோக்கங்களை பாடசாலை அமைப்புக்கு எடுத்துச் செல்வதற்கான கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் நேற்று (31) கல்வி அமைச்சில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்கள் ஜி. எம். ஆர். டி. அபோன்சோ, எச். எம். கே. ஜே. பி. குணரத்ன உள்ளிட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரந்த மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சுகாதாரம், கழிவு முகாமைத்துவம், மாணவர்களின் நடத்தை மற்றும் நெறிமுறை குணங்களை வளர்ப்பது போன்ற கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு தொடர் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின் போது, அதில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, Clean Sri Lanka திட்டத்தின் நோக்கங்களை விளக்கி, தனது கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நடைபெற்றது, மேலும் Clean Sri Lanka திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல தேவையான பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டன.
இந்தப் பயிற்சியில், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவும் பங்கேற்றனர்.