இலங்கையை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

இலங்கையை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 654 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இன்னிங்ஸை இடைநிறுத்தியது.

இந்தநிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி 165 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தமையினால் ஃபாலோ ஆன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.

அதற்கமைய, இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )