பொலிஸ் உயர் அதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்

பொலிஸ் உயர் அதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்

நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பி.பி.எஸ்.எம்.தர்மரத்ன, சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அநேரம் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கே.பி.எம் குணரத்ன, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

களுத்துறைக்கு பொறுப்பாக கடமையாற்றிய பிரதி பொலிஸ்மா பி.ஏ.என்.எல். விஜேசேன, நலன்புரி பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன் கடமைகளை நிறைவேற்றும் பெண் பிரதி பொலிஸ்மா அதிபர் பத்மினி, நலன்புரி பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து களுத்துறைக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)