பிலிப்பைன்சில் உளவு பார்த்ததாக சீனாவை சேர்ந்த 5 பேர் கைது

பிலிப்பைன்சில் உளவு பார்த்ததாக சீனாவை சேர்ந்த 5 பேர் கைது

தென்சீனக்கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ்-சீனா இடையே சமீப காலமாக பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதற்கிடையே சீனாவைச் சேர்ந்த சிலர் தங்களை தைவான் நாட்டவர்களாக கூறிக்கொண்டு பிலிப்பைன்ஸிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

ஆனால் அங்குள்ள ஸ்ப்ட்ராட்லி தீவு (Spratly Islands) அருகே சூரிய சக்தியில் இயங்கும் கேமராக்களை நிறுவி அவர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் அவர்களது ஆவணங்களை சோதனை செய்தபோது அவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து உளவு பார்த்ததாக கூறி 5 சீனர்களை பிலிப்பைன்ஸ் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )