உரிமம் பெற்ற அனைத்து துப்பாக்கிகளையும் ஒப்படைத்தார் யோஷித ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகளையும் ஒப்படைத்துள்ளாதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட பாதுகாப்புக்காக உரிமங்களுடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்றும், மறுஆய்வுக்குப் பிறகு மீண்டும் வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு சமீபத்தில் அறிவித்தது
இந்த உத்தரவின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச, ஆரம்பத்தில் தன்னிடம் இருந்த ஏழு உரிமம் பெற்ற துப்பாக்கிகளில் ஐந்து துப்பாக்கிகளை ஒப்படைத்தார்.
அவரிடம் இருந்த மீதமுள்ள இரண்டு துப்பாக்கிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.