முப்பது வருடங்களின் பின்னர் மொரட்டுவ பல்வேறு சேவைகள் கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி
இன்று நடைபெற்ற மொரட்டுவ மட்டுப்படுத்தப்பட்ட பல்வேறு சேவைகள் கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் முப்பது வருடங்களின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியீட்டியுள்ளது.
தேசிய மக்கள் கட்சிக்கு 46 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 51 வாக்குகளும் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தி மொரட்டுவ பல்வேறு சேவை கூட்டுறவுச் சங்கம் வெற்றி பெற்றுள்ளது.