யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் !

யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் !

யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுவதாக யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் சுட்டிக்காட்டினார்.

யாழ்.மாவட்ட அபிவி ருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே பதில் அரச அதிபர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘பிரதேச செயலர் பிரிவு வாரியாக சாவகச்சேரியில் 14, நல்லூரில் 07, தெல்லிப்பழையில்06, யாழ்ப்பாணத்தில் 03, உடுவிலில் 03 என 33 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன.

எனவே இந்த ரயில் கடவைகளை பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும்.

யாழில் நேர அட்டவணைக்கு ஏற்ப 38 புதிய பஸ்கள் தேவையாக உள்ளன.

அந்தவகையில் யாழ்ப்பாணம் சாலைக்கு 23 பஸ்களும், பருத்தித்துறை சாலைக்கு
10 பஸ்களும், காரைநகர் சாலைக்கு 05 பஸ்களும் தேவையாக உள்ளன.

யாழ்ப்பாணத்தில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகின்றன.

யாழில் 06 வீதிச் சமிக்ஞை விளக்குகளே காணப்படுகின்றன. எனவே வீதி விபத்துக்களை குறைக்க வீதி சமிக்ஞைகளை அமைக்க வேண்டும் ‘என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )