சிவப்பு பாதரசம் இருப்பதாக கூறி மோசடி செய்ய முயன்றவர்கள் கைது

சிவப்பு பாதரசம் இருப்பதாக கூறி மோசடி செய்ய முயன்றவர்கள் கைது

சுமார் 900 மில்லியன் ரூபாய் மதிப்புள்ளதாகவும், 20 மில்லியன் ரூபாய்க்கு விற்க தயாராக இருந்ததாகவும் கூறப்படும் சிவப்பு பாதரசம் கொண்ட சிலிண்டருடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட்ட சிவப்பு பாதரசம் கொண்ட சிலிண்டரை, பாணந்துறை தொழிலதிபர் ஒருவரிடம் வாங்கி, பின்னர் ஒரு இந்திய அதிபருக்கு அதிக தொகைக்கு விற்கலாம் என்று தெரிவித்து, அதை விற்கத் தயாரானபோது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் வந்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள சிவப்பு பாதரசம் கொண்ட சிலிண்டரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சிலிண்டரில் உள்ள கரைசலை ஆய்வு செய்தபோது, ​​அதில் குவார்ட்ஸ், கிரானைட் மற்றும் பிற பாறைகள் கலந்திருப்பது கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )