அரசியல் தேவைகளுக்காக பொய்யான முறையில் கைது செய்பவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும்

அரசியல் தேவைகளுக்காக பொய்யான முறையில் கைது செய்பவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும்

அரசியல் தேவைகளுக்காக பொய்யான முறையில் கைது செய்தால், அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும்.” என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் “ 2015 ஆம் ஆண்டும் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டார். 42 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார். இன்னும் வழக்கு தொடுக்கப்படவில்லை. விமல் வீரவன்சவுக்கும் இப்படிதான் நடந்தது.

நிதி மோசடி விசாரணைப் பிரிவின் செயலாளராக அன்று இருந்த ஆனந்த விஜேபாலதான் தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார். எனவே, அவர்தான் கைதுகளுக்கு தலைமை வழங்குகின்றார். 2015 இல் நடந்ததுதான் தற்போதும் நடக்கின்றது.

பொய்யான முறையில் கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் அதனை செய்பவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்போம் என்பதை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினருக்கு கூறி வைக்க விரும்புகின்றோம்.

யோசிதவின் கைது தொடர்பில் முன்கூட்டியே தெரியும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறி இருந்தார். எனவே, இந்த கைது அரசியல் தேவையின் நிமித்தம் நடந்துள்ளது என்பது உறுதியாகின்றது.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )