அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை

அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை

அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கடந்த காலங்களில் பைல்களை மறைத்திருந்தனர். அவற்றை மீள விசாரணைக்கு உட்படுத்தி எடுப்பதற்கு சிறிது காலம் செல்லும்.

சில விடயங்களுக்காக பிணை கிடைத்தாலும் வழக்கு விசாரணை தொடரும். பொலிஸார் உரிய வகையில் செயற்படுவார்கள் என நாம் நம்புகின்றோம். பொலிஸாருக்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.

சிலர் கூறுவது போல் அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை. நடைபெற்றுள்ள சம்பவங்கள் தொடர்பில்தான் விசாரணைகள் முன்னோக்கி செல்கின்றன.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )