உயர் நீதிமன்றம் சென்ற மஹிந்த ராஜபக்ஷ
தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவொன்று பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
முறையான பாதுகாப்பு மதிப்பீடு இல்லாமல், தனது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட மெய்ப்பாதுகாவலர்கள் குழுவிலிருந்து 60 அதிகாரிகள் மட்டுமே தக்கவைக்கப்பட்டனர் என்றும், மற்ற அனைவரும் நீக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.