முச்சக்கரவண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயம்

முச்சக்கரவண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயம்

நாவலப்பிட்டி பல்லேகம பிரதேசத்தில் நேற்று (23) ஏற்பட்ட முச்சக்கர வண்டி விபத்தில் 8 மாத குழந்தை காயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பதியினர் நாவலப்பிட்டி இருந்து கண்டி நோக்கிச் செல்லும் போது நாவலப்பிட்டி பல்லேகம பிரதேசத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி பிரதான வீதியில் குடை சாய்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது . மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )