எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டின் போது நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலைமை காணப்படுகின்றது
எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ் – சிங்கள புத்தாண்டின் போது நாட்டில் மற்றுமொரு அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலைமை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை முன்வைத்தார்.
மேலும் அவர், ”அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட தரவுகளில் பிழைகள் காணப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அந்த தரவுகளுக்கு அமையவே அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அங்காடிகளில் கூட சிவப்பு அரிசி காணப்படவில்லை. ஆகவே, இந்த விடயத்தை வேடிக்கையாக எடுத்துக்கொண்டு அரிசி தட்டுப்பாடு இல்லையென்று கூறாதீர்கள்.
இந்த விடயம் தொடர்பில் உரிய முறையில் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுங்கள்.
இல்லையெனில், எதிர்காலத்தில் பாரியளவிலான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் எந்தவொரு வகையிலும் அரசியல் தலையீடுகளுக்கு இடமில்லை.” என தெரிவித்துள்ளார்.