கேரளாவில் குழந்தைகளுக்கு பரவும் வாக்கிங் நிமோனியா
தற்போது “வாக்கிங் நிமோனியா” என்ற வித்தியாசமான நோய் பரவி வருகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் இந்த நோய் பாதிக்கிறது.
லேசான காய்ச்சல், தொடர் இருமல், மூச்சுத்திணறல், தொண்டை புண் மற்றும் தோல் வெடிப்பு உள்ளிட்ட வைகள் “வாக்கிங் நிமோனியா” தொற்றின் அறிகுறிகளாகும்.
5 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இருமல் இருந்தால் “வாக்கிங் நிமோனியா” பாதிப்பாக இருக்கலாம். ஆகவே அந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மேலும் “வாக்கிங் நிமோனியா” பாதித்தவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் பாக்டீரியா சுவாசத்துளிகள் மூலம் பரவுகிறது. ஆகவே இந்த நோய் பாதித்தவர்கள் முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும்.
பொதுவாக இந்த நோய் 5 முதல் 15 வயதுடைய குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. ஆனால் கேரளாவில் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளும் “வாக்கிங் நிமோனியா” தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.