மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அவரின் பிள்ளைகளுக்கும் வெட்கமில்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட விஜயராமையில் அமைந்துள்ள இல்லத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே அதனை பராமரிப்பதற்காக சுமார் 430 லட்சம் பணத்தை அரசாங்கம் செலவழித்துள்ளது என நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (23) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ”மஹிந்த ராஜபக்ஷ தற்பொழுது வசித்துக் கொண்டிருக்கின்ற இந்த சுகபோகமான இல்லத்துக்கு அரசாங்கம் இவ்வளவு பணத்தை செலவழித்த பின்பும் அவருக்காக எவ்வாறு நீங்கள் நியாயத்தை கேட்பீர்கள்
அவருக்காக பேசுவதற்கு முன் வரும் உங்களுக்கு வெட்கம் இல்லையா ? அதே போன்று அந்த வீட்டில் தற்பொழுது இருக்கின்ற மஹிந்த ராஜபக்சவிற்கும் வெட்கமில்லை.
சமீபகாலமாக ஒவ்வொரு இடத்திலும் சென்று கருத்து தெரிவிக்கின்றார்கள், அரசாங்கம் கூற மட்டுமே நாங்கள் இருக்கின்றோம் அரசாங்கம் கூறினால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறுவோம் என தெரிவித்தனர்.
அரசாங்கம் சார்பில் நாங்கள் கூற தேவை இல்லை உங்கள் மானம் மரியாதையை காப்பாற்றிக் கொண்டு தயவு செய்து வீட்டை விட்டு வெளியேறுங்கள்.
நான் நினைக்கவில்லை அவருக்கு செல்வதற்கு இல்லம் ஒன்று இல்லை என்று அவருக்கு செல்வதற்கு ஏராளமான வீடுகள் இருக்கின்றது.
அதேபோன்று நம் நாட்டில் ஒரு பழக்கவழக்கம் இருக்கின்றது பெற்றவர்களை பிள்ளைகள் தான் வயதான பின்பு பார்த்துக் கொள்வார்கள்.
மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்கள் தொழில் செய்கின்றார்கள் ஒருவர் இலங்கை கடல் படையில் வேலை செய்தார். இன்னும் ஒரு மகன் நிலாவுக்கு ரொக்கேட் அனுப்பினார். மற்றவர் பாராளுமன்றத்தில் இருக்கின்றார்.
இந்த மூன்று பிள்ளைகளுக்கும் தனது தாய் தந்தையை பார்க்கலாம் இந்த நாட்டில் பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கு சபாத் வாங்குவதற்கு கூட பணம் இல்லாத தாய் தந்தைகள் இருக்கும் பொழுது அவர்கள் செலுத்துகின்ற வரிப்பணத்தில் ஏன் நாங்கள் இவர்களை பராமரிக்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிள்ளைகளுக்கும் வெட்கமில்லை
அந்த இல்லத்தில் தங்கியுள்ள பெற்றவர்களுக்கும் வெட்கமில்லை ஏன் இவர்களுக்கு வெட்கம் இல்லையா எமது நாட்டில் இருக்கின்ற சாதாரணமான மக்களின் வரிப்பணத்தில் சாப்பிட்டு முடித்து இருப்பதற்கு. “என தெரிவித்துள்ளார்.