தெலுங்கில் ரிலீஸாகும் மதகஜராஜா படம்

தெலுங்கில் ரிலீஸாகும் மதகஜராஜா படம்

விஷால் மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மதகஜராஜா’. இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியுள்ளார்.

வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு உருவான இப்படம் 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 12-ந் திகதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.

நடிகர்கள் விஷால், சந்தானம், மனோபாலா ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவனம் பெற்றதால் படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

மேலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 10 நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இப்படத்தை சத்ய கிருஷ்ணன் புரொடக்சன்ஸ் வெளியிடுகிறது. தெலுங்கு ரிலீஸ் திகதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற 31-ந் திகதி வெளியாக உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )