பண்டாரவளை – தெமோதர பகுதியில் லொறி விபத்து ; சாரதி காயம்
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி மாபிள்களை ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளார். அத்துடன், முச்சக்கரவண்டிகள் சில சேதமடைந்துள்ளன.
பண்டாரவளை தெமோதர பகுதியில் இவ்விபத்து இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த லொறி கொழும்பிலிருந்து பதுளைக்கு மாபிள்களை ஏற்றிக்கொண்டு பயணித்த போது தெமோதர பகுதியில் வைத்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது .
இதன்போது லொறியில் இருந்து சிதறி விழுந்த மாபிள்கள் தெமோதர புகையிரத நிலையத்திற்கு செல்லும் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில முச்சக்கரவண்டிகள் மற்றும் அதிஸ்டலாபச்சீட்டு விற்பனை செய்யும் தற்காலிக வியாபார நிலையம் ஒன்றின் மீதும் விழுந்துள்ளது.
இதனால் முச்சக்கரவண்டிகளும் அதிஸ்டலாபச்சீட்டு விற்பனை செய்யும் கூடும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியில் பிரேக் பிடிக்காமல் போனமையே விபத்துக்கான காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.