மஹிந்த ராஜபக்ஷவுக்கு 10 வீடுகளை வாங்கி கொடுக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு 10 வீடுகளை வாங்கி கொடுக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினால், அவருக்கு 10 வீடுகளை வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று (21) இதை குறிப்பிட்டார்.

மேலும் அவர், ”மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள வீட்டை எடுத்தால், அதை 44 இலட்ச ரூபாய்க்கு வாடகைக்கு விட முடியாது.  விஜேராம பகுதியில் அவ்வளவு அதிக விலைக்கு யாரும் வீட்டை வாடகைக்கு எடுக்க மாட்டார்கள். 

அவ்வாறு செய்ய முடியும் என்றால், சீனர்களுக்குத்தான் அது சாத்தியமாகும். மஹிந்தவின் வீட்டை விடுவிக்க அவர் தயார் எனில், மக்கள் அவருக்கு 10 வீடுகளைக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷ தற்போது 80 வயதை அடைந்துள்ள நிலையில், அவரது பாதுகாப்பு நீக்கப்பட்டாலும், மக்களின் ஆதரவு அவருக்கு எப்போதும் கிடைக்கும். 

ஜனாதிபதி அநுர, மஹிந்தவுடன் மோதுவதைவிடுத்து, அவரின் மகன் நாமலுடன் மோதுங்கள்.” என தெரிவித்துள்ளார். 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )