மஸ்கெலியா ப்ரௌன்ஸ்வீக் தோட்ட பிரிவில் தீ விபத்து  ;  4 வீடுகள் சேதம்

மஸ்கெலியா ப்ரௌன்ஸ்வீக் தோட்ட பிரிவில் தீ விபத்து ; 4 வீடுகள் சேதம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட ப்ரௌன்ஸ்வீக் தோட்ட  பிரிவில் இலக்கம் ஒன்று தொடர் குடியிருப்பில் நேற்று (21) இரவு 9 மணிக்கு  தீ விபத்து இடம் பெற்றுள்ளது.

இத் தீ பரவலின் போது நான்கு குடியிருப்பு சேதமடைந்துள்ளதாக   மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

ஏனைய 12 குடியிருப்பு பகுதிக்கு தீ பரவாமல் தோட்ட மக்கள் மற்றும் மஸ்கெலியா பொலிஸார் போராடி  தடுத்து நிறுத்தி உள்ளனர். 16 விடுகளை கொண்ட தொடர் குடியிருப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது 

அந்த 16 குடியிருப்பு பகுதியில் இருந்த மக்கள் தங்களது உறவினர் வீடுகளில் தங்கி உள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட எட்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினூடாக அனர்த்த நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளன. 

இதன்படி, குறித்த மக்களுக்கான சமையல் உபகரணங்கள், ஆடைகள், அவசர மருந்து வகைகள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் என்பன வழங்கப்படவுள்ளன. 

அத்துடன் அங்கு பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப் பைகள் மற்றும் பாதணிகள் என்பவற்றை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )