காலிறுதிக்கு முன்னேறியஅமெரிக்காவின் கோகோ
அவுஸ்திரேலிய ஓபன் ரென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் கோகோ காப் காலிறுதிக்கு முன்னேறினார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் – சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்குடன் மோதினார்.
இந்தப் போட்டியில் முதல் செட்டை 5-7 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த கோகோ காப், அடுத்த இரு செட்களை 6-2, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இதன் காரணமாக 5-7, 6-2, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் பெலிண்டா பென்சிக்கை வீழ்த்தி கோகோ காப் காலிறுதிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று 21ஆம் திகதி நடைபெறும் காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் – ஸ்பெயினின் பாலா படோசாவுடன் மோதவுள்ளார்.
CATEGORIES Sports News