அனைத்து பணமும் மக்கள் சேவைக்காக பயன்படுத்தப்படுகின்றது
NPP அரசாங்கத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் கடந்த காலத்தைப் போலவே ஒரே கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நிஹால் கலப்பட்டியில் இருந்து தொடங்கப்பட்ட நடைமுறையை NPP தொடரும் என்றும் ஜனாதிபதியும் அதையே செய்கிறார் என்றும் அவர் நேற்று (20) ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ” அனைத்துப் பணமும் பொரளையில் உள்ள கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது அது மக்கள் சேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த நிதியின் மூலம் மக்களுக்காக பணியாற்ற அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான அறிக்கைகள் குறித்து கேட்டபோது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது. எம்.பி.க்கள் மக்களுக்காக பணியாற்றுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.